பெரும்பான்மையை நிரூபித்தது விஜய்யின் த.வே.க அரசு
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசு மீது மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கு தேவையான 86 வாக்குகளில் 144 வாக்குகளைப் பெற்று தவெக அரசு வெற்றி பெற்றது.
இதில் 22பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, 05 பேர் நடுநிலை வகித்தனர். 61 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
6 பகுதிகளாக எண்ணிக் கணிக்கும் விதிப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் வாக்கெடுப்பில் திமுக தரப்பினர் வெளிநடுப்பு செய்ததோடு, அதிமுக தரப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் சார்ந்த எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீண்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்குப் பின்னர் முதல்வர் விஜய்யின் தவெக அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
