விளையாட்டு

கற்பிட்டி கோட்ட மட்ட போட்டிகள்; பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் பஸ்ஹான் சம்பியனாக தெரிவு

கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் எம் ஆர் எம் பஸ்ஹான் 20 வயது ஆண்கள் பிரிவில் 5000 மீட்டர் , 1500 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஆகிய ஓட்டங்கள் மூன்றிலும் முதலாம் இடம் பெற்று கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் 20 வயது ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

மேலும் பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 18 வயது ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் எம்.ஜே.எம். ஜஹித் முதலிடத்தையும், வை.எம். யாசித் இரண்டாம் இடத்தையும் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றதுடன் 12 வயது பிரிவின் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வை யுஸ்ரா இரண்டாம் இடத்தினையும் 12 வயது பிரிவில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் எம்.என்.எம் சிமாக் மூன்றாம் இடத்தை
பெற்று வலய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக அதிபர் எம்.ஜீ. லுக்மான் ஹகீம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் எம். என். எம். அர்ஷாத்திற்கும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர்கள் ஆகியோர் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *