உள்நாடு

வாழைச்சேனையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

வாழைச்சேனை குறிஞ்சி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) சடலமாக மீட்கப்பட்ட நபர் திங்கட்கிழமை (11) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பகுதியில் புல்வெளியில் அடையாளம் காணப்படாத நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபரின் உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் ஓட்டமாவடி பிரதேச சபை சுகாதார ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரின் அங்க அடையாளங்கள் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடை உள்ளிட்டவையை அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர்.

மரணமடைந்த நபர் செம்மண்ணோடை பாரூக் நானா வீதி எனும் முகவரியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஆதம்பாவ நஸீர் என்பவராவார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *