ஆட்சியமைக்க உரிமை கோரி இன்று மீண்டும் ஆளுனரைச் சந்திக்கும் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (07) மீண்டும் ஆளுநர் அர்லேகரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றிய போதியலும் 118 இடங்கள் தேவைப்படுகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் தவெகவுடன் கைகோர்த்ததில் 5 இடங்கள் கிடைத்துள்ளன.
மேலும் 6 இடங்கள் தேவைப்படுவதால் இன்று பதவியேற்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
