உள்நாடு

அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் நேற்று (28) செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில்
பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அட்டாளைச்சேனையினுடைய அபிவிருத்திகள் தொடர்பாகவும் இந்த ஆண்டிலே அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கடந்த ஆண்டிலே செய்யப்பட்ட ஒதுக்கீடுகளினுடைய மீளாய்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு, மக்கள் திருப்திகரமான முறையில் மக்களுக்கான அபிவிருத்தி சென்றடைகின்றதா? என்பதை பாராளுமன்ற உறுப்பினர் மக்களிடம் வினவுகின்ற அடிப்படையில் உரிய நிறுவனத் தலைவர்களிடம் அதனை வினா தொடுத்து அதற்கான தீர்வினை வெகுவிரைவிலே மக்கள் எட்டக்கூடிய வகையில் செயற்படுத்துமாறும் அனைத்து அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம்.தாஹிர், எம்.எஸ்.அப்துல் வாஸித், எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி. எப். நஹீஜா முஸாபிர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், எம்.ஜௌபர், கணக்காளர் எம்.எப். பர்ஹான் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *