இலங்கையின் முதலாவது ஹஜ் குழு மே முதலாம் திகதி சவூதி அரேபியா பயணம்
இவ்வாண்டு (2026) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி முதலாவது ஹஜ் குழு மே மாதம் 01 ஆம் திகதி இரவு 09.05 மணிக்கு சவூதி ஏயார் லைன்ஸ் விமானம் மூலம் பயணமாகவுள்ளனர்.
இந்த முதலாவது ஹஜ் குழுவில் 07 ஹஜ் முகவர்கள் மூலமாக 325 பேர் பயணமாகவுள்ளனர்.
இவர்களை வழியனுப்பும் நிகழ்வு 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 05 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, பிரதியமைச்சர் முனீர் முழப்பர், ஹஜ் கமிட்டி தலைவர் றியாஸ் மிஹ்ழார், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள், ஹஜ் முகவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இலங்கையிலிருந்து இவ்வாண்டு 3,500 யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
