உலகம்

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவில் புதிய வரலாறு, 84.45 சதவீதம் வாக்குகள் பதிவு; ஒட்டு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது வாக்குப்பதிவு. தமிழக சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மிகவும் அமைதியாக தேர்தல் திருவிழா நிறைவு பெற்றது.தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மாலை 6 மணி நிலவரப்படி 84.45
சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

தமிழக சட்டமன்றத்திற்கு ஒரேகட்டமாக வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 6 மணி வரை தேர்தல் நடைபெற்றறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. இதன்படி 4 முனைப்போட்டிநிலவுகிறது. இந்த தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக அனல் பறந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.

வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அனைவரும் வந்து வாக்களிப்பதற்கான வேண்டுகோளை தேர்தல் ஆணையம் வகுத்தளித்துள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியேயும், உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன்மூலம் தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தங்களின் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நேரடியாக பார்வையிட முடியும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திறனாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்பட்டுள்​ளன.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என்று அடையாளம் காணப்​பட்​டுள்​ளன. இங்கு நுண்பார்வையாளர்கள், துப்​பாக்​கி ஏந்திய போலீ​ஸார் அல்​லது துணை ராணுவப் படை​யினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.
இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழ்நாட்டில் காலையில் இருந்து மாலை வரை விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடைபெற்றது. குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் அதிக ஆர்வத்துடன் தனது வாக்கு பதிவை செய்வதற்காக நீண்ட கியூ வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் ​பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்ததது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தலைநகர் சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவில் புதிய வரலாறு படைத்துள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மாலை 6 மணி நிலவரப்படி 84.45
சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் கடந்த 2011 ஆம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 78.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த வாக்கு சதவிகிதத்தை இந்த ஆண்டு 6 மணி நிலவரத்திலேயே முறியடிக்கப்பட்டுள்ளது. 6மணி நிலவரப்படி 84.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில் எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு;

1980 – 65.4%

1984 – 73.5%

1989 – 69.2%

1991 – 63.8%

1996 – 66.9%

2001 – 59.1%

2006 – 70.8%

2011 – 78.2%

2016 – 73.6%

2021 – 76.6%

2026 – 84.45%

பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டார்கள்.மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணியாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடுபடுத்தப்பட்டுள்​ளனர்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *