உள்நாடு

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 135 ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸ்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 135 ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப வைபம்; எதிர்வரும் 30ஆம் திகதி (30.04.2026) வியாழக்கிழமை மாலை அஸர் தொழுகையின் பின்னர் சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபத்துஷ் ஷாதுலி அல்ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) தலைமையில் நடைபெறும்.

ஷாதுலிய்யாத் தரீக்காவின் ஸ்தாபகர் அல் குத்புல் அக்பர் இமாம் அபுல்ஹசன் அலியுஷ் ஷாதுலி (ரலி) அவர்களின் 860ஆவது ஜனன தினத்தை முன்னிட்டும் ஷாதுலிய்யா மஷாயிகுமார்களின் ஞாபகார்த்தமாகவும் இம்மஜ்லிஸ் இடம்பெறுகிறமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி மஜ்லிஸ் நடைபெறுவதோடு தொடர்ந்து 9 நாட்கள் மனாகிப் மஜ்லிஸ் இடம்பெறுவதோடு, உலமாக்களினால் மார்க்க உபன்னியாசங்களும் நிகழ்த்தப்படும் என சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். ஷிஹாப் தெரிவித்தார்.

தினமும் அஸர் தொழுகையைத் தொடர்ந்து சாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸ் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.எம். செய்னுல் ஆப்தீன் (பஹ்ஜி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி), கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.எம். பாருக் (மக்கி) மௌலவி முகத்தமுஷ் ஷாதுலி அஹமத் முபாரக் (மன்பஈ) ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கப்படும்.

தினமும் இடம்பெறும் மனாகிப் மஜ்லிஸில் ஆத்மீக ஞானி இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பணிகள் பற்றிய விசேட மார்க்கச் சொற்பொழிவும் இடம்பெறும்.

மே மாதம் 09ம் திகதி நடைபெறும் தமாம் மஜ்லிஸுக்கு கலீபதுல் குலபாவும் காலி அலிய்யா சட்டக்கல்லூரி பணிப்பாளருமான மௌலவி அல்ஹாஜ் உஸ்தாத் எம்.இஸட். ஸுஹ்ர் (பாரி) தலைமை வகிப்பார்.

ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஆரம்ப தின மஜ்லிஸில் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (முர்சி) உரையாற்றுவார்.

02ம் தின நிகழ்வில் மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அஸ்ஸெய்யித் பஸ்மின் மௌலானா (முர்ஸி)யும், 3ம் தின நிகழ்வில் கொழும்பு உம்மு ஸாவியா பிரதம இமாம் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் அஹமத் ஸுபி (மஹ்ழறி) யும், 4ம் தின நிகழ்வில் மௌலவி அல்ஹாஜ் எம்.என்.எம். நாமிக் (அலவி) யும், 5ம் தின நிகழ்வில் பேருவளை மருதானை முஹம்மத் அல்-பாஸி அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.எப்.எம். பைஸல் காமில் (ஸக்காபி)யும், 6ம் தின நிகழ்வில் மௌலவி அல்ஹாஜ் எம்.எம்.எம். முஸாகிர் (அலவி)யும், 7ம் தின நிகழ்வில் மௌலவி எம். ரிஸ்கான் (ஸெய்லானி) யும், 8ம் தின நிகழ்வில் மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.என்.எம். இக்ராம் (பாஸி)யும் 9ம் தின நிகழ்வில் சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுல் சாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் மௌலவி அல்ஹாஜ் எம்.ஜே.எம். பஸ்லான் (அஷ்ரபி) பீ.ஏ யும் உரைநிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே மாதம் 9 ம் திகதி சனிக்கிழமை (09.05.2026) நடைபெறும் தமாம் மஜ்லிஸில் கலீபதுல் குலபாவும் காலி அலிய்யா சட்டக்கல்லூரி பணிப்பாளருமான மௌலவி அல்ஹாஜ் உஸ்தாத் எம்.இஸட். ஸுஹ்ர் (பாரி) விஷேட துஆப் பிரார்த்தனை நடாத்துவதுடன் சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபத்துஷ் ஷாதுலி அல்ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) விசேட சொற்பொழிவாற்றுவார்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியாரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெறும் இம்மஜ்லிஸில்; கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி), கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.எம். செய்னுல் ஆப்தீன் (பஹ்ஜி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.எம். பாருக் (மக்கி) ஆகியோர் உட்பட கலீபாக்கள், உலமாக்கள், முகத்தமீன்கள், இஹ்வான்கள் என பலரும் பங்குபற்றுவர்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *