துல்கஃதா மாதம் இன்று முதல் ஆரம்பம்
புனித துல்கஃதா மாதத்திற்கான தலைப் பிறை நேற்று சனிக்கழமை (18) நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1447 புனித துல்கஃதா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழு தலைவர். மெளலவி எம்.பி.எம். ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்றது
இதன்போது நாட்டின் பலபாகங்களிலும் துல் கஃதா மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதால் பிறை தென்பட்டதை பிறைக் குழுத் தலைவர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார் .
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள். பிறைக் குழு உறுப்பினர்கள் .அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மெளலவி மபாஹிம் உள்ளிட்ட பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அஹமட் அப்றோஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் , வளிமண்டல திணைக்கள அதிகாரி மொஹமட் ஸாலிகீன் , மற்றும் ஏனைய பள்ளி வாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பிரகாரம் நேற்று (18) சனிக்கிழமை மாலை மஹ்ரிபு தொழுகையைத் தொடர்ந்து புனித துல் கஃதா மாதம் ஆரம்பமாவதாக பிறைக் குழுத் தலைவர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.



(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
