கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் தீ விபத்து
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை காலை (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதேச செயலக களஞ்சிய அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கட்டடத்திற்கு அருகில் கிடந்த குப்பைக்கு வைத்த தீ இந்த விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தில் பிரதேச செயலக களஞ்சிய அறையில் இருந்த பல பொருட்கள் பாதிப்படைந்துள்ளன.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
