உள்நாடு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) அங்கத்தவர்கள் ஒரு வார கால ஊடகப் பயிற்சி நெறிக்காக துருக்கி விஜயம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) அங்கத்தவர்களுக்காக, இலங்கைக்கான துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடகப் பயிற்சி நெறியில் பங்குபற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்ட 10 அங்கத்தவர்கள் இன்று துருக்கியின் அங்காரா நகர் நோக்கிப் பயணமாகினர்.

இப் பயிற்சி நெறிக்கான வேண்டுகோளை அமைப்பின் ஸ்தாபக போஷகர் என்.எம்.அமீன் விடுத்திருந்ததுடன், இப் பயிற்சிநெறியை சாத்தியமாக்குவதற்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் எம்.பி.எம்.பைறூஸ் முன்னெடுத்திருந்தார்.

இதற்கமைய, பங்குபற்றுனர்களின் தெரிவில் வெளிப்படைத்தன்மையை பேணும் பொருட்டு, 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி இந்தப் பயிற்சி நெறிக்காக அங்கத்தவர்களிடையே பகிரங்கமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கமைய 15 அங்கத்தவர்கள் உரிய காலப்பகுதியில் விண்ணப்பித்திருந்தனர்.

தூதரகத்தின் வரையறைகளுக்கு அமைவாக, விண்ணப்பித்த 15 பேரிலிருந்து தகுதியான 9 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன், இக்குழுவை வழிநடத்திச் செல்வதற்காக அமைப்பின் உப தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சிஹார் அனீஸ் தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயணத்தை மேற்கொள்ளும் 10 பேர் கொண்ட ஊடகவியலாளர் குழு விபரம்:

  1. MOHAMED MOHAIDEEN MUBARAK (SLRC/ SLBC)
  2. JUNAID RISWAN (Dan / Pirai TV)
  3. SAM NIJAM MOHAMED SUHAIL (Vidivelli)
  4. MOHAMED HARIS AHAMED ROOMY (Seven Sense Productions)
  5. NOOR MOHAMED SAMEEHA – (News Bar)
  6. MOHAMED HUSSAIN FATHIMA HUSNA (Thinakkural)
  7. SEGU MOHIDEEN RIZWAN – (Thinakaran Online)
  8. MOHAMED LUTHUFI MOHAMED AKRAM (UTV Lanka)
  9. UMAR LEBBE NOORUL HUTHA (Thamilan)
  10. MOHAMED ANEES MOHAMED SHIHAR (Team Lead)

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் துருக்கி தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

எதிர்வரும் காலங்களிலும் எமது அங்கத்தவர்களுக்கு இவ்வாறான சர்வதேச ஊடகப் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க போரத்தின் செயற்குழு தொடர்ந்தும் முயற்சிகளை முன்னெடுக்கும்.

பயணம் மேற்கொள்ளும் அனைத்து அங்கத்தவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

நமது சக அங்கத்தவர்களின் பயணமும் பயிற்நெறியும் பாதுகாப்பானதாக அமைய அனைவரும் பிரார்த்திப்போம்.

Photo 1: தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் துருக்கி தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு. SLMMF சார்பில் தலைவரும் செயலாளரும் பங்கேற்றனர்.

Photo 02: துருக்கி செல்லும் ஊடகவியலாளர் குழு விமான நிலையத்தில்.

தலைவர்/ செயலாளர்
SLMMF
19.04.2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *