உலகம்

லெபனான் இஸ்ரேல் 10 நாள் போர் நிறுத்தம் அமுல்.

லெபனானும் இஸ்ரேலும் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்த போர்நிறுத்தம் (EST) மாலை 17:00 மணிக்கு (22:00 BST) ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மூலம் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் தற்காலிகமாகத் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு உடன்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 21:00 GMT மணிக்கு லெபனானில் போர் நிறுத்தம் தொடங்கும் என டிரம்ப் அறிவித்தார்.”லெபனானின் மிகவும் மதிக்கப்படும் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேலின் பிரதமர்நெதன்யாகு ஆகியோருடன் நான் மிகச் சிறந்த உரையாடல்களை மேற்கொண்டேன்,” இந்த இரு தலைவர்களும் இன்று மாலை 5 மணிக்கு (EST) 10 நாள் போர் நிறுத்தத்தை முறையாகத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளனர்,”உலகெங்கிலும் 9 போர்களைத் தீர்த்து வைத்தது எனது பெருமைக்குரிய செயலாகும், இது எனது பத்தாவது போராக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *