உள்நாடு

ஆழ்கடலில் போதைப் பொருட்களுடன் சிக்கிய படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு வெள்ளிக்கிழமை (17) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த நெடுநாள் மீன்பிடி படகு வியாழக்கிழமை (16) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது. அதனுடன் படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் நீண்டதூர நடவடிக்கைக் கப்பல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் படகும் மீனவர்களும் பொறுப்பேற்கப்பட்டனர். குறித்த மீன்பிடி படகில் உள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருள் அடங்கியதாகச் சந்தேகிக்கப்படும் பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *