விளையாட்டு

ஆசியக்கிண்ண ரி20 தொடர் இன்று ஆரம்பம்; கிண்ணத்தை வேட்டையாட அசலங்க தலைமையில் இலங்கை

17 ஆவது ஆசிய கிண்ண ரி20 கிரிக்​கெட் தொடர் இன்று ஐக்​கிய அரபு இராச்சியத்தில் இன்று 9ஆம் திகதி மிகக் கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது.

இன்றிலிருந்து எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் ஆசியாவின் முதல் 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. அதற்கமைய இவ் 8 அணிகளும் ஏ மற்றும் பி என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் லீக் சுற்று இடம்பெறவுள்ளது.

அதற்கேற்ப குழு ஏ இல் இந்​தி​யா, பாகிஸ்​தான், ஓமன் மற்றும் ஐக்​கிய அரபு இராச்சியம் ஆகிய 4 அணிகளும், குழு பி இல் இலங்​கை, பங்களாதேஷ், ஆப்​கானிஸ்​தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய 4 அணி​களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

லீக் சுற்​றில் ஒவ்​வொரு அணி​யும் தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்​றின் முடி​வில் இரு பிரி​விலும் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறும். இந்த சுற்​றில் 4 அணி​களும் தங்​களுக்​குள் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும் வகையில் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்​பர் 4 சுற்று எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடை​பெறவுள்ளது. மேலும் இத் தொடரின் சம்பியன் மகுடம் வெல்​லும் அணி எது என்பதை தீர்​மானிக்​கும் இறு​திப் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி நடை​பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் தொடரின் அனைத்து போட்டிகளும் டுபாய் மற்றும்அபு​தாபி​யிலுள்ள மைதானங்களில் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் தொடக்க நாளான இன்று ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள ஆப்​கானிஸ்​தான் மற்றும் ஹொங்கொங் அணி​கள் மோதுகின்​றன. இந்த போட்டி இலங்கை நேரப்​படி இரவு 8 அணிக்கு அபுதாபியில் இடம்பெறவுள்ளது.

இத் தொடரில் ​சரித் அசலங்க தலை​மையி​லான இலங்கை அணி​ வலு​வாகவே திகழ்​கிறது. இருப்பினும் குழு ஏ இல் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இலங்கை அணிக்கு சிறந்த போட்டியினை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *