Wednesday, July 29, 2026
Latest:
உள்நாடு

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தை  கூட்டுவதற்கு சபாநாயகரால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு அமைய விசேட பாராளுமன்ற அமர்வு இன்று 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு அமைய அரசாங்கத்தினால் நிதி செயல்நுணுக்கக் கூற்று ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில் விசேட பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

இதற்கு அமைய பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16ற்கு அமைய பிரதமரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் பாராளுமன்றம் ஜூன் 30 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு கூட்டப்படவுள்ளது. இது தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப 4.30 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *