மீலாதுன் நபி தின எல்லே சுற்றுப்போட்டியின் போது முஸ்லிம் பிரமுகர்கள் கௌரவிப்பு





மீலாதுன் நபி தினத்தையொட்டி இனங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில், கொலன்னாவ நகர சபையினால் எல்லே சுற்றுப்போட்டியொன்று, நேற்று (12) சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொலன்னாவ நகர சபை உறுப்பினர் ஏ.என்.எம். பிர்தௌஸ் மௌலவியின் ஒருங்கிணைப்பில் 2 ஆவது தடவையாக இடம்பெற்ற இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதன்போது, கொலன்னாவ பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பிரமுகர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இச்சுற்றுப் போட்டியில், கொழும்பு மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, கொடிகாவத்த – முல்லேரிய பிரதேச சபை மற்றும் களனி பிரதேச சபை ஆகியவற்றின் எல்லே அணிகள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
