உள்நாடு

மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல்.

இலங்கை தென் மாகாணத்தில் மிகவும் பழைமை வாய்ந்த மத்ரஸாக்களில் ஒன்றான மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அரபிக் கல்லூரியின் 17வது பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும 2025.05.12 ம் திகதி திங்கட்கிழமை காலை 7:30 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த ஒன்றுகூடலின் போது கல்லூரியின் முன்னேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடப் படவுள்ளதுஎனவே கல்லூரியின் நலன் மற்றும் வளர்ச்சி கருதி பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாமல் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைக்குமாறுகல்லூரி அதிபர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல் ஹாஜ் அல் உஸ்தாத் இஸ்திகார் (பாரி ), பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ,வெலிகமை அன் நூன் அகடமியின் அதிபர் மௌலவி ஸாஜித் (அல்பாஸி ) மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர், கஹட்டவிட்ட முஅஷ்கருர் ரஹ்மான் பெண்கள் அரபிக் கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி இக்ராம் (அல்பாஸி) அவர்கள் அன்போடு அழைப்பு விடுக்கின்றார்கள்.

(பேருவலை பீ.ம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *