ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் பயனாளிக்கு வீடு கையளிப்பு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் ரன் விமன விசேட வீட்டுத் திட்ட வேளைத்திட்டத்திற்கு அமைய தெரிவு செய்யப்பட்ட கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஏத்தாளை சமுர்த்தி வங்கியில் அங்கத்துவம் பெற்ற ஏத்தாளை கிராம சமுர்த்திப் பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிக்கு இன்று (3) வீடு கையளிக்கப்பட்டது.
கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் ஏத்தாளை சமுர்த்தி சேவகர் பிரிவிற்கு உட்பட்ட பாத்திமா சுமையா எனும் சமுர்த்திப் பயனாளிக்கு ரன் விமன விசேட வீட்டுத் திட்ட வேலைத்திட்டத்திற்கு அமைய ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெருமதியான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (3) கல்பிட்டி பிரதேச செயலாளகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் P.G.S.N. பிரியதர்ஷினி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கல்பிட்டி சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் தினூஷா மதுரங்கி பெர்ணான்டோ, ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் C.M.D. சுமுது சுஜானி பெரேரா, கல்பிட்டி சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி உதவியாளர் W. அன்டன் சமந்த பெர்ணான்டோ ஆகியோருடன் ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் தலைமைக் கள உத்தியோகத்தர் W.G. பாலித்த பெர்ணான்டோ, ஏத்தாளை சமுர்த்தி கள உத்தியோகத்தர் A.H. நிஸாம்தீன் மற்றும் கள உத்தியோகத்தர்களான பஸ்லி, டில்ஷாத், நிஸ்மி ஆகியோருடன் ஏத்தாளை பிரதேச வாசிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






(அரபாத் பஹர்தீன்)
