Friday, October 23, 2026
Latest:
உள்நாடு

கம்பஹாவில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு.

நடப்பாண்டின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது..

இந்த முதல் 3 வாரங்களில் 2 டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து 491 நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 558 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 95 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 22 அதிக ஆபத்துள்ள டெங்கு சுகாதார அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *