Thursday, October 22, 2026
Latest:
உள்நாடு

பாலி செயன்முறையின் பிரதிநிதிகள் குழுவினர் கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு மையத்திற்கு விஜயம்

2026 பாலி செயன்முறை (Bali Process) கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காக, மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் தேசிய மனிதக் கடத்தல் தடுப்பு செயலணியினால், பாலி செயன்முறை மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (International Organization for Migration – IOM) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கள ஆய்வு விஜயத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர் வியாழக்கிழமை (2026 ஒக்டோபர் 22) கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு மையத்திற்கு விஜயம் செய்தனர்.

கடல்சார் பிராந்தியம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தகவல் பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு மையத்தின் பங்கு, பொறுப்புகள் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தின்போது, கடல்சார் பிராந்தியம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல், தகவல் பரிமாற்றம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் குறித்த மையம் வழங்கும் பங்களிப்பு தொடர்பாக அக்குழுவினருக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கையை, கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு மையத்தின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டர் சதுர ரணசிங்க மற்றும் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் தரிந்து பண்டார ஆகியோர் மேற்கொண்டனர்.

மேலும், மனிதக் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் ஒழுங்கற்ற குடியேற்றத்தைத் தடுப்பதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நடைமுறை ரீதியான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கும் இவ்விஜயம் வாய்ப்பளித்தது. அத்துடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மற்றும் பரந்த ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பொதுவான கடல்சார் பாதுகாப்பு மற்றும் மனிதப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவமும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் கடற்படை சார்பில் நீரியல் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கெப்டன் ஹரிந்த தீஷன கலந்துகொண்டார்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *