உள்நாடு

சிங்களப்பாட நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவு, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் (ONUR) அனுசரணையுடன் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான 100 – மணித்தியால சிங்களப்பாட நெறியினை பூர்த்தி செய்தமைக்காக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாவிதன்வௌி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. சசிகலாவின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் பீ. பிரணவரூபன், கணக்காளர் றிஸ்வி யாஹ்ஸர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் தி. கிருபைராஜா மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஓ.ஜி.கே. குசுமிந்த, கே.பீ. மனோஜ் இந்திரஜித், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.சிவம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் 100- மணித்தியாலய பாடநெறியானது யு.டீ. ஆரிபீன் ஆசிரியரினால் பயிற்றுவிக்கப்பட்டதோடு, கற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *