உள்நாடு

சிறுபான்மையினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்த சமுதாய கலந்துரையாடல்

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் தற்போதய சூழலில் வடகிழக்கு சிறுபான்மையின மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கான செயலமர்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி முஹமட் அவர்களின் தலைமையில் 2024.11.10 ம் திகதி மட்டக்களப்பு கல்லடி கிரீன் கார்டின் ஹோட்டலில் நடைபெற்றது.

இன் நிகழ்வின் பங்கு பற்றுனர்களாக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்வினை திட்ட முகாமையாளர் பேரம்பலம் ரேணுகா மற்றும் வாணி சைமன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *