கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனிக்கு 9 மாடிக் கட்டிடம்
வரலாற்று சிறப்பு மிக்க கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியின் புதிய 9 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (28) அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்விற்கு வருகை தந்த பிரமுகர்களை பாடசாலை அதிபர் திருமதி என். ஸானியா டேன் உள்ளிட்ட பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களும் இணைந்து மாலை அனுவித்து வரவேற்றனர்.
ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரியில் அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் ஓம்னி பிளொக் புதிய ஒன்பது மாடி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி ஸாலி பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார்.
கொழும்பு 12 ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரியின் 141 ஆண்டு கால கல்விப் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயத்தைப் பதிக்கும் வகையில், இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள ஒன்பது மாடிக் கட்டிடம் கல்வி, விளையாட்டு மற்றும் புத்தாக்க வளாகத்திற்காகவுமாக திட்டமிட்ட இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கோலாகலமாக நடைபெற்றது.
இந்தப் பாரிய கல்வித் திட்டத்தின் புதிய கட்டிடத்திற்கு “அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் ஓம்னி பிளொக்” (Al Haj Eliyas Abdul Kareem Omni Block) என உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டதுடன், அதற்கான நினைவுக் கல்லும் பிரதம அதிதியாலும் நன்கொடையாளராலும் திறந்து வைக்கப்பட்டதுடன் அடிக்கல்லினை அதிதிகள் பாடசாலையின் அதிபர் திருமதி என். ஸானியா டேன், நன்கொடையாளரின் குடும்ப உறுப்பினர்கள், மருதானை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரிக்கார், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி, ‘லைட் ஃபார் லைஃப்’ (LFL) அமைப்பின் பிரதிநிதிகள், மாகாண மற்றும் பிரதேச சபைகளின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் உள்ளிட்டவர்களுடன் பழையாமாணவர்களும் இணைந்து நாட்டினர்.
மறைந்த அல் ஹாஜ் எம்.எச். உமர் அவர்களின் கல்வித் தொலைநோக்குப் பார்வையையும், ஹமீத் அல்-ஹுசைனியா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியையும் அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், லைட் ஃபார் லைஃப் (Light for life– LFL) அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் எஸ்.எஸ்.யூ. ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான பணிப்பாளர் சபையின் அழைப்பின் பேரிலும், மலிபன் வோவன்ஸ் (Maliban wovens Pvt. Ltd) ) நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் அவர்களின் அனுசரணையிலும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதிலும் தேசிய அபிவிருத்தியை வலுப்படுத்துவதிலும் தரமான கல்வி மற்றும் நவீன கல்விசார் உட்கட்டமைப்புகள் வகிக்கும் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார், அத்துடன் இந்த முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்ட ‘லைட் ஃபார் லைஃப்’ (Light for Life) அமைப்பு மற்றும் ஹமீதியன் சமூகத்தினரின் கூட்டு முயற்சிகளை அவர் பாராட்டினார்.
மேலும்இ கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக பிரதம அதிதி, கௌரவ அதிதி, அல்-ஹாஜ் எலியாஸ் அப்துல் கரீம் மற்றும் அவரது குடும்பத்தினர், இணைந்து அடிக்கல் நாட்டும் நிகழ்வை மேற்கொண்டனர்.
அமைக்கப்படவுள்ள இந்த ஒன்பது மாடிகளைக் கொண்ட கட்டிடம் கல்வி, விளையாட்டு மற்றும் புத்தாக்க வளாகம் இக்கல்லூரிக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய கல்விசார் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இது கட்டி முடிக்கப்பட்டதும், நவீன ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) ஆய்வகங்கள், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி வசதிகள், விரிவுரை அரங்குகள், மொழி மையங்கள், விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர் மேம்பாட்டு வசதிகள் மற்றும் நவீன நீச்சல் தடாக வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைய உள்ளது.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், அதிபர்கள், நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலதரப்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.











ஏ.எஸ்.எம்.ஜாவித்
2026.06.28
