உலகம்

இந்திய இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளருமான மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி லக்னோவில் காலமனார்

அவரது மறைவிற்கு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஆகியோர் இரங்கல்

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

இந்திய இஸ்லாமிய அறிஞரும், பேராசிரியரும், எழுத்தாளருமான மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி அவர்கள், லக்னோவில் 29.06.2026 திங்கள்கிழமை அதிகாலை தனது 72-வது வயதில் காலமனார்.

லக்னோவின் புகழ்பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனமான தாருல் உலூம் நத்வதுல் உலமா (Darul Uloom Nadwatul Ulama)-வில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர் 1974-ல் ஷரியா மற்றும் இஸ்லாமிய அறிவியலில் பட்டம் பெற்றவர்.

நத்வதுல் உலமாவில் 1976-ல் ஹதீஸ் கலையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், சவூதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற இமாம் முஹம்மது இப்னு சவூத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் 1980-ல் ஹதீஸ் துறையில் மற்றுமொரு முதுகலைப் பட்டத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய பின், தாருல் உலூம் நத்வதுல் உலமா நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பல தசாப்தங்களாக அங்குள்ள ‘தஃவா மற்றும் ஷரியா’ (Faculty of Dawah and Shariah) துறையின் தலைவராக மிகச் சிறந்த முறையில் பணியாற்றினார்.

முஸ்லிம் இளைஞர்களைக் கல்வி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக 1974-லேயே ‘ஜமியாத் ஷபாபுல் இஸ்லாம்’ (Jamiat Shabaab ul Islam) என்ற அமைப்பைத் தோற்றுவித்து, அதன் தலைவராகச் செயல்பட்டார்.

அரபி மற்றும் உருது மொழிகளில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். இஸ்லாமிய இறையியல், ஹதீஸ், இஸ்லாமிய வரலாறு மற்றும் தற்காலச் சமூகப் பிரச்சினைகள் குறித்து ஏராளமான நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஆங்கிலம், உருது, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளில் வெளியான பல முன்னணி இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணை ஆசிரியராகவும் பங்களித்துள்ளார்.

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே சுமுகமான தீர்வு காண்பதற்காக ரவிசங்கர் போன்றவர்களுடன் இணைந்து சுமூகமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முயன்றார்.

இவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியதாவது : இந்திய இஸ்லாமிய அறிஞரும், பேராசிரியரும், எழுத்தாளருமான மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி மரணமுற்ற செய்தியை அறிந்து துக்கமும் துயரமும் அடைந்தேன்.

மார்க்கக் கல்வி, ஆராய்ச்சி, அழைப்புப் பணி, சீர்திருத்தப் பணி என பல்வேறு களங்களில் முத்திரை பதித்த மௌலானா சையத் சல்மான் நத்வி அவர்கள்
அரபி மற்றும் உருது மொழிகளில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். இஸ்லாமிய இறையியல், ஹதீஸ், இஸ்லாமிய வரலாறு மற்றும் தற்காலச் சமூகப் பிரச்சினைகள் குறித்து ஏராளமான நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஆங்கிலம், உருது, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளில் வெளியான பல முன்னணி இதழ்களுக்கு ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவருடைய சேவை ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கு பேருதவியாக இருந்தது.அவருடைய மரணம் அவருடைய குடும்பத்தாருக்கும் மாணவர்களுக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்துக்கும் இஸ்லாமிய உலகத்தின் கல்விக் குழாம்களில் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவரது மறைவு பேரிழப்புக்கு அல்லாவுடைய பெரும் கருணையால் மீள் வளத்துக்கும் அல்லாவிடம் பிராத்திப்போம். அவருடைய பிளைகளை பொறுத்தி கொண்டு ஜன்னத்தூல் பிர்ஃதௌஸ் என்னும் பேராணந்த பெரும் வீட்டை இறைவன் அவருக்கு வழங்குவனாக அவரின் மறைவால் வாடும் அவரது மக்கள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும்
ஜம்ரன் ஜமீலன் என்னும் அழகிய பொறுமையை வழங்குவதற்கு இறைஞ்சிவோம்.எனது சார்பிலும் இந்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர்
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியதாவது :
மௌலானா சையத் சல்மான் நத்வி அவர்களின் திடீர் மரணச் செய்தி அறிந்து அதிர்ந்து போனேன். அவர் தற்காலத்தின் தலை சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவர். நாடறிந்த எழுத்தாளர். பன்னூலாசிரியர். கல்லியாளர். சிந்தனையாளர். அவருடைய மரணம் அவருடைய குடும்பத்தாருக்கும் மாணவர்களுக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்துக்கும் இஸ்லாமிய உலகத்தின் கல்விக் குழாம்களில் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி அவர்கள் தம்முடைய ஒட்டுமொத்த வாழ்வையும் கல்வி, ஆராய்ச்சி, சத்திய மார்க்க அழைப்பு ஆகியவற்றிலும் கல்வி நிலையங்களையும் அறிவுக் களங்களையும் கட்டி அமைப்பதிலும் அவற்றைச் செழித்தோங்கச் செய்வதிலும் சித்தாந்த வழிகாட்டுதலை ஆகியவற்றிலும் அர்ப்பணித்தார். குர்ஆன, ஹதீஸ், சீரத், இஸ்லாமிய ஃபிக்ஹு ஆகியவற்றின் தனிச் சிறப்பு மிக்க ஆசானாக அவர் நம்முடைய நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பயிற்றுவதிலும் பண்படுத்துவதிலும் முத்திரை பதித்தார். அவர் விட்டுச் சென்றுள்ள அவருடைய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், பேருரைகள் ஆகிய அனைத்தும் கல்விச் சேவைக்கான விலைமதிப்புமிக்க பொக்கிஷமாக இருக்கின்றன. அவற்றிலிருந்து முஸ்லிம் உம்மத் நீண்டக்காலம் வரை பயனீட்டிக் கொண்டே இருக்கும்.

தாருல் உலூம் நத்வத்துல் உலமா பல்கலைக்கழகத்துடனும் ஜாமிஆ சையத் அஹ்மத் ஷஹீ‘த் பல்கலைக்கழகத்துடனுமான அவருடைய நீண்ட நெடியத் தொடர்பும், ஜமிய்யத் ஷபாபுல் இஸ்லாம் நிறுவனத் தலைவராக அவர் ஆற்றிய சேவைகளும், ஏராளமான கல்வி, மருத்துவ நிறுவனங்களை நிறுவி நடத்துவதில் அவர் ஆற்றிய முதன்மையான பங்கும் மேலும் மார்க்கக் கல்வியைப் பரப்புவதிலும், ஆளுமைகளை வார்த்தெடுப்பதிலும், சமூக, சமுதாயச் சேவைகளிலும் அவருடைய மும்முரமான பங்களிப்பும் பங்கேற்பும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

அவர் மார்க்கக் கல்வியின் ஆழமான, தொலைநோக்குப் பார்வையை தற்காலத் தேவைகளுக்கு இயைந்ததாக ஆக்கி இந்தியாவிலும் உலக அளவிலும் இஸ்லாமிய சிந்தனைக்கும் சித்தாந்தத்துக்கும் புதிய திசைகளை வழங்கியிருந்தார்.

பெரும் பெரும் சிந்தனையாளர் கூட தவறுகளுக்கும் பிழைகளுக்கும் அப்பாற்பட்டவராக இருத்தல் முடியாது. மௌலானா ஸல்மான் நத்வி அவர்களின் சில சிந்தனைகள், நிலைப்பாடுகள், அறிக்கைகள் ஆகியவற்றோடு முரண்பாடுகள் இருக்கக்கூடும். இருந்தன. ஆனால் அவற்றின் காரணமாக பல்வேறு களங்களில் அவர் ஆற்றியிருக்கின்ற மகத்தான சேவைகளின் முக்கியத்துவம் குறைந்துவிடாது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சார்பாக நான் அவருடைய குடும்பத்தாருக்கும், மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும், நேசர்களுக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்துக்கும் மனப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களின் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கின்றோம். அவரைச் சார்ந்தோருக்கு அழகிய பொறுமையை வழங்குவாயாக என்று கருணைமிக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

மேலும் மௌலானா ஸல்மான் நத்வி அவர்களின் பிழைகளைப் பொறுத்து அருள்வாயாக. மன்னித்தருள்வாயாக. இஸ்லாத்துக்காக அவர் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய சேவைகளை ஏற்றுக் கொள்வாயாக. அவர்களுக்கு உத்தமர்களின் உயர்ந்த அந்தஸ்தைத் தந்தருள்வாயாக. ஜன்னத்துல் ஃபிர்தவ்சின் உயர்ந்த மாளிகைகளை வழங்குவாயாக என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

மேலும் மார்க்கத்துக்காக சேவையாற்றுகினற் இந்த இலடசியப் பணியை மேற்கொள்கின்ற, அவரைப் போன்ற ஒழுக்கசீலமும் திறமையும் புலமையும் ஆற்றலும் வாய்ந்த ஆளுமைகளை முஸ்லிம் உம்மத்துக்கு வழங்குவாயாக! என்றும் பிரார்த்திக்கின்றோம் இவ்வாறு இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *