மு.கா.வின் கோரிக்கைகள் ஏற்பு..! சஜித்துடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்து..!
முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் நேற்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமினால் கையளிக்கப்பட்டது.
இந்த ஆவணத்திலுள்ள கோரிக்கைகளை ஆராய்ந்த சஜித் பிரேமதாச சாதகமான பதிலை வழங்கி உள்ளதால் முஸ்லிம் காங்கிரஸ் இன்று சஜித் பிரேமதாசவுடன்தேர்தல் கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
