O/L பரீட்சை நாளை ஆரம்பம்: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி…! -பரீட்சை ஆணையாளர்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை நாளை முதல் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை 387,646 பாடசாலை விண்ணப்பதாரிகளும் 65,331 தனியார் பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 452,979 பேர் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
3527 பரீட்சை நிலையங்களில் இப் பரீட்சையை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
