உள்நாடு

புத்தளம் வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு சிங்கிள் கெப் ரக வாகனங்கள் வழங்கும் நிகழ்வு

வனஜீவராசிகள் திணைக்களத்தின் நீண்டகாலமாக நிலவி வரும் பௌதிக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் யானை முகாமைத்துவப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிங்கிள் கெப் ரக வாகனங்கள் 5 பிராந்திய அலுவலகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.


இன்நிகழ்வு, நேற்று 24 பிற்பகல் அரச நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன,தலைமையில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக , வனாத்த வில்லு பிரதேச செயலாளர் மற்றும்
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாகனம் வழங்கப்படுவதன் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மனித – யானை மோதல் முகாமைத்துவப் பணிகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

(ஏ.என்.எம் முஸ்பிக்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *