“தர்மப்பிரபாஷ்வர” விருது விழாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனில் ஸ்டென்லி தன்திரி ஆரச்சியும் கௌரவிப்பு
கலாசார அமைச்சின் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தர்மப்பிரபாஷ்வர” விருது விழா, கத்தோலிக்க ஊடகத் தொடர்பாடல் ஆணைக்குழுவின் தலைவரும், பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குரிய ஜூட் நிஷாந்த ஆண்டகை அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையின் கலை மற்றும் கலாசாரத் துறைகளுக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்த கிறிஸ்தவக் கலைஞர்களைக் கௌரவிக்கும் நோக்கில் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் களுத்துறை மாவட்ட ஊடகவியலாளர் சங்க முக்கியஸ்தரும் பன்நூலாசிரியருமான சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனில் ஸ்டென்லி தன்திரி ஆரச்சியும் கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.





(பேருவளை பீ.எம். முக்தார்)
