Wednesday, November 18, 2026
Latest:
உள்நாடு

முடங்கியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; 2027 வரவு–செலவுத் திட்டத்தில் ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வில்லையால் தொழிற்சங்கங்கள் அதிரடி வேலைநிறுத்தம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் எதிர்நோக்கும் நீண்டகால சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாத நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வழமையான நிர்வாக மற்றும் சேவை நடவடிக்கைகள் இன்று (18.11.2026) பெரிதும் பாதிக்கப்பட்டன.

2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால சம்பளப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, 20 சதவீதக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம் (SEUEOA), தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (SEUEU), பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழு (UTUJC) மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனம் (Inter University Trade Union Federation) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் இவ்வடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது.

2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பல்கலைக்கழக ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளுக்குப் போதிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்பாக, அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள், 20 சதவீதக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மேலதிக நேரப் பணிக்கான கொடுப்பனவுகள் ஆகியவற்றில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் பல்வேறு கொடுப்பனவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நீண்டகாலமாகப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், நடைமுறையில் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய உறுதியான தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாகக் காணப்படும் 20 சதவீதக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், மேலதிக நேரப் பணிகளுக்கான கொடுப்பனவுகளிலும் நிலவும் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் தொடரும் சம்பள முரண்பாடுகள், கொடுப்பனவுகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்றைய தொழிற்சங்கப் போராட்டத்தின் காரணமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சில நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய வழமையான சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் விளைவாக பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சேவை வழங்கும் செயற்பாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல்கலைக்கழகத்தின் வழமையான செயற்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகின.

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட இன்றைய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். அகமட் முனாஸ் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். சுல்பி ஆகியோர் தலைமை தாங்கினர்.

பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகள் போதியளவில் கவனிக்கப்படவில்லை என்ற அதிருப்தி தற்போது தொழிற்சங்கப் போராட்டமாக வெளிப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதைவிடத் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பதும் பல்கலைக்கழகச் சமூகத்தின் மத்தியில் எதிர்பார்ப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு, 20 சதவீதக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட ஊழியர்களின் அடிப்படை கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளை முடக்கி, ஊழியர்களின் அதிருப்தியை வெளிப்படுத்திய முக்கிய தொழிற்சங்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *