உள்நாடு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலாளராக வருண ஸ்ரீ தனபால பதவியேற்பு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரியான திரு. வருண ஸ்ரீ தனபால அவர்கள் அண்மையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்த புதிய செயலாளர், அமைச்சில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

இதன்போது, இளைஞர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்வது மற்றும் விளையாட்டுத்துறையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு. ஏ.எச்.எம். யூ. அருண பண்டார ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து குறித்த பதவி வெற்றிடமானது. இதற்கமைய, அந்தப் பதவிக்கு திரு. வருண ஸ்ரீ தனபால அண்மையில் நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *