புத்தளம், றத்மல்யாய பகுதியில் நவீன பேருந்து தரிப்பிடம் திறந்து வைப்பு
புத்தளம், றத்மல்யாய (618B) கிராம சேவகர் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிநவீன பேருந்து தரிப்பிடம் 2026 நவம்பர் 15ஆம் திகதி மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரஹீம் அண்ட் பிரதர்ஸ் நிறுவனத்தின் முழுமையான நிதி அனுசரணையில் இத்தரிப்பிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹமட், பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம். கியாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர், நிர்வாகத்தினர் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய ரஹீம் அண்ட் பிரதர்ஸ் குடும்பத்தினருக்கு ஊர் மக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். மேலும், பேருந்து தரிப்பிடத்தைப் பாதுகாத்து சுத்தமாகப் பராமரிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.




(ஏ.என்.எம் முஸ்பிக்)
