உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 2026 நேற்று 16ஆம் திகதி சர்வதேச நேரப்படி இரவு 9.11 மணியளவில் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் மலுக்கு மாகாணத்தில் உள்ள தானிம்பார் தீவுகளுக்கு அருகிலுள்ள பண்டா கடல் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அவுஸ்திரேலியாவின் டார்வின் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.

2004 டிசம்பர் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி உருவானது. அந்த அனுபவத்தின் காரணமாக இவ்வாறான நிலநடுக்கங்கள் தொடர்பில் பிராந்திய நாடுகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

தற்போதைய நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *