நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி உதைப்பந்தாட்ட அணியின் வரலாற்றுச் சாதனை
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டத் தொடரின் 16 வயதிற்குட்பட்ட பிரிவின் டிவிசன் – 1 தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி.
கடந்த வாரம் நடைபெற்ற அகில இலங்கை ரீதியான 16 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்டத் தொடரின் பிரிவு – II (Division II) போட்டிகளில் பங்கேற்ற நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி அணி, தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியதன் மூலம் பிரிவு – II இல் இருந்து பிரிவு – I இற்கு முன்னேறி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இளம் வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் அணியின் ஒருங்கிணைந்த முயற்சியின் பிரதிபலிப்பாக இந்த முன்னேற்றம் அமைந்துள்ளது.
இந்தச் சாதனையை முன்னிட்டு, அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (OBA) அணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
மேலும், அணியின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பு வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள், நன்கொடையாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெரியமுல்லை சமூகத்தினருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் கால்பந்துத்துறை வளர்ச்சியில் இந்த முன்னேற்றம் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க இந்த வெற்றி இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(அரபாத் பஹர்தீன்)
