உள்நாடு

வெட்டிங் ஸோனில் கோலாகலமாக நடைபெற்ற நாடா மற்றும் ஜமீலா அகாடமிகளின் சான்றிதழ் வழங்கும் விழா

கொழும்பு, கிராண்ட்பாஸ் ‘வெட்டிங் ஸோன்’ மண்டபத்தில் நாடா பியூட்டி கேர் அகாடமி மற்றும் ஜமீலா மெஹந்தி அகாடமி இணைந்து நடத்திய மாபெரும் விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா அண்மையில் சிறப்பாகக் நடைபெற்றது.

விழாவுக்கு நாடா பியூட்டி கேர் அகாடமியின் இயக்குநர் ஏ.ஆர்.எஃப். ரிஸ்னியா மற்றும் ஜமீலா மெஹந்தி அகாடமியின் இயக்குநர் திருமதி. அஸ்னா முஸ்தாக் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கி நெறிப்படுத்தினர்.

மணப்பெண் அலங்காரம், ஒப்பனை (Makeup) மற்றும் மெஹந்தி கலைகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற 35க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்நிகழ்வில் தங்களது சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முதன்மை விருந்தினர் செல்வி ரிஃபானா, சிறப்பு விருந்தினர்கள் திருமதி ரிஸ்லா, செல்வி நூருன் மற்றும் திரு. வி. ஜே. ஃபஸ்மி

சனிக்கிழமை (7ஆம் திகதி) மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறும் வகையில், முதல் தடவையாக மாணவர்களுக்கும் வருகை தந்த விருந்தினர்களுக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது விழாவை மேலும் சிறப்பித்தது.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவிகளின் திறமைகளைப் பாராட்டி விருதுகளும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

கலைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் சமுதாயத்தினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்த இந்த விழா, கலந்துகொண்ட அனைவரின் பாராட்டுகளையும் பெற்று மாபெரும் வெற்றியாக நிறைவடைந்தது.

இத்தகைய திறமையான மாணவிகளை உருவாக்குவதிலும், அழகுக்கலைத் துறையை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கும் நாடா மற்றும் ஜமீலா அகாடமிகளின் இயக்குநர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் நமது வாழ்த்துக்களை பெற்றோர்கள் தெரிவித்தனர்.

(அக்ரம் லுதுபி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *