உள்நாடு

MUTUR JMI EXPO 2026 நிகழ்வில் இளம் எழுத்தாளர் விருது ஏத்தாளை அகீலா ஜௌபருக்கு வழங்கி கௌரவம்

முதூர் JMI தனியார் நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற ‘MUTUR JMI EXPO 2026 – Excellence Awarding Ceremony’ நிகழ்வில், கற்பிட்டி ஏத்தாளையைச் அகீலா ஜௌபர் இளம் எழுத்தாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவ் விருது வழங்கும் நிகழ்வு, (2026 ஒக்டோபர் 25) ஞாயிற்றுக்கிழமை, முதூரிலுள்ள பேர்ல் கிரேன்ட் ஹோல் மண்டபத்தில் முதூர் JMI தனியார் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான ஜே.எம். இஹ்ஷான் தலைமையில் நடைபெற்றது.

கவிதை மற்றும் இலக்கியத் துறையில் தனது படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் அகீலா ஜௌபரின் இலக்கியப் பயணத்தை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

JMI நிறுவனத்தின் 10 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மூதூர் எக்ஸ்போ 2026 நிகழ்வில், பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர்களைக் கௌரவிக்கும் நோக்கில் விருதுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *