உள்நாடு

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் கையூட்டல் விவகாரம் தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (28.10.2026) அவரின் விளக்க மறியலை நீடித்துள்ளது.

மேலும் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நவம்பர் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டது.

இவ்வழக்கு தொடர்பாக ராஜபக்ச இன்று (28.10.2026) நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆஜராகும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (27) உத்தரவு பிரப்பித்திருந்தார்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொள்வனவுப் கொடுக்கல் வாங்கலில சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் 100 மில்லியன் ரூபாயை கையூட்டலாக பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் ஒப்புதலுடன் நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய மூன்று நபர்களுக்கு எதிராக நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளதுடன் 59 சாட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

மேலும்இ வழக்கு நிரந்தர மேல் நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *