விளையாட்டு

சர்வதேச கராத்தேப் போட்டியில் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் சாதனை; 05 மாணவர்களுக்குக் கறுப்புப் பட்டி

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் சர்வதேச கராத்தேப் போட்டியில் பங்கேற்றதுடன், அவர்களில் 5 மாணவர்கள் கராத்தே கலையில் கறுப்புப் பட்டி அணிவிக்கப்பட்டுச் சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன், ஏனைய மாணவர்களும் போட்டிகளில் பதக்கங்களை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களான ஆர்.எம்.ரிஹாஸ், எப்.எம்.சுரைம், எஸ்.எம்.முஹம்மத், எம்.எச்.எம்.அதீக், எம்.ஆர்.எம்.ராஷித்,
ஆகியோரே கறுப்புப் பட்டி அணிவிக்கப்பட்ட ஐவர் ஆவர்.

மேலும், கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக இந்நிகழ்வில் பங்கேற்று வருகின்றமையைப் பாராட்டி, கல்லூரிக்கும் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜப்பான் கராத்தே டூ ஷோட்டோகான் கற்கைச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த “ஷினிச்சி ஷியோஷி சர்வதேச கராத்தே கிண்ணம்”, “சர்வதேச திறந்த கராத்தே சம்பியன்ஷிப்” போட்டிகள் அண்மையில் (17) வென்னப்புவ, சேர் அல்பர்ட் எப். பீரிஸ் உள்ளக விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.

மார்க்கக் கல்வியுடன் இணைந்து, பண்பாடு, மாணவர்களின் உடல் வலிமை, மன உறுதி, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும் கல்லூரி மாணவர்கள் முன்னேறி வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இச்சாதனையைப் பெற்றுக்கொண்ட ஐந்து மாணவர்களுக்கும், இப்போட்டியில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்ற ஏனைய மாணவர்கள் அனைவருக்கும் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் இச்சாதனைகளுக்குப் பங்களித்த அனைவருக்கும் காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேக் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹி, கல்லூரி முகாமைத்துவ குழுவினர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *