தெதுறு ஓயாவை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹாவ, கொபெய்கனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் ராசநாயக்கபுர ஆகிய பகுதிகளின் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், வெள்ள அபாயம் தொடர்பில் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
