முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு பிடியாணை
நீதிமன்ற விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த பிடியாணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஊடாகப் பிறப்பித்து, அதனைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ஏனைய இரு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
