பெருமளவு போதைப் பொருட்களுடன் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் எழுவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பனவும் நேற்றிரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரத்ன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறிடங்களில் நடாத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஏழு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், ஐந்து சந்தேக நபர்களிடம் 32 கிராம் 780 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், இருவரிடம் 04 கிராம் 840 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜரூள் அவர்களின் ஆலோசனையில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரத்னவின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்களான திலங்காவெல, எம்.ஏ.எம்.அக்ரம், ராஜபக்ஷ, பியகாந்த மற்றும் பொலிஸ் விஷேட பிரிவைச்சேர்ந்த எம்.பயாஸ் மற்றும் விஜிதரன் ஆகிய விஷேட குழுவினரே இப்போதைப்பொருள் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நாவலடியிலுள்ள பூட்சிட்டி உரிமையாளரான வந்த 24 வயதுடைய இளைஞரிடமிருந்து 22 கிராம் 340 மில்லிகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருளும் முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் நீண்டகாலமாக பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள வியாபாரிகளுக்கு மொத்தமாக போதைப்பொருட்களை வினியோகித்து வந்துள்ள்தாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞனிடமிருந்து 02 கிராம் 770 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 23 வயதுடைய ஓட்டமாவடி பிரதேச இளைஞனிடமிருந்து 02 கிராம் 410 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், பொலநறுவை, தம்பாளை பிரதேசத்தைசேர்ந்த 26 வயது இளைஞன் போதைப்பொருள் வியாபாரத்திற்காக ஓட்டமாவடிக்கு வந்த வேளை கைது செய்யப்படுள்ளதுடன், அவரிடம் இருந்து 02 கிராம் 820 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த 46 வயது நபரிடமிருந்து கெரோயின் போதைப்பொருள் 02 கிராம் 480 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதே பிரதேசத்தைச்சேர்ந்த 29 வயது இளைஞரிடமிருந்து 02 கிராம் 360 மில்லி கிராம் கெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏழு சந்தேக நபர்களையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது மொத்த வியாபாரி எனச்சந்தேகிக்கப்படும் இளைஞரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய ஆறு சந்தேக நபர்களுக்கும் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய0 பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரத்ன தெரிவித்தார்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
