உள்நாடு

அனுராதபுர மாவட்ட சாதனை மாணவர்களுக்கு ரிஷாத் தலைமையில் கெளரவம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுத் தொடர், இம்முறையும் நாடளாவிய ரீதியில் “AWARD OF EXCELLENCE – ASSAD INSPIRE AWARD” என்ற திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் Z-Score அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட அநுராதபுர மாவட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17) நாச்சியாத்தீவு முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் பிரதி பொருளாளருமான அல்-ஹாஜ். ARM தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான Eng. றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன். விஷேட பேச்சாளராக மதீனா வித்தியாலய அதிபர் எச்.எம். சஹீட் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக, கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ். அமீர் அலி, கட்சியின் மூத்த பிரதி தலைவரும் முன்னாள் தூதுவருமான சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், கட்சியின் பொருளாளர் Dr. மரைக்கார், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான என்.ரீ.எம். தாஹீர் மரைக்கார், கட்சியின் சட்ட விவகார பணிப்பாளரும் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப், அம்பாறை மாவட்ட கல்விப்பிரிவு இணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் உள்ளிட்டோருடன் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அநுராதபுர மாவட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், உலமாக்கல், பாடசாலை அதிபர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிறந்த கல்வி பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் கல்வி முயற்சிகளைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *