உள்நாடு

புத்தளம் ஸாஹிராவிற்கு சமபோஷ கால்பந்து தொடரில் மகத்தான வெற்றி

சிலாபம் நகரில் நடைபெற்ற சமபோஷ 14 வயதிற்குட்பட்ட பாடசாலைளுக்கிடையிலான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா பாடசாலை அணியும் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை அணியும் மோதிக் கொண்டது இதில் 1–0 என்ற கோல் கணக்கில் புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரி அணி வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம், புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரியின் 14 வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணி அகில இலங்கை மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஐ ஏ நஜீம் தெரிவித்துள்ளார்

அத்தோடு ஸாஹிராவின் புதிய பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் பயணமே வெற்றிப் பயணமாக அமைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் புதிய பேருந்தின் முதல் பயணத்திலேயே வெற்றியுடன் திரும்பிய பாடசாலை வீரர்களுக்கும் அவர்களுக்கு பக்க பலமாக இருந்த இணைப்பாட விதான அதிபர் எம் நளீம் மற்றும் பயிற்றுவிப்பாளர் டி.பீ றோய் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *