ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி பழைய மாணவர் ஏற்பாட்டில் 10 கழகங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.
கொழும்பு 12 ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியின் 2014 பெச் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 10 கழகங்கள் கலந்து கொள்ளும் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த கிரிகட் சுற்றுப்போட்டி ஒன்றினை எதிர் வரும் 25 ஆம் திகதி வத்தளை விளையாட்டு மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மேற்படி போட்டிகளை நடாத்துவது தொடர்பான ஊடக மாநாடு ஒன்றினை 2014 பெச் மாணவர்கள் நேற்று (18) ஞாயிற்றுக் கிழமை மருதானையில் அமைந்துள்ள எக்ஸ்சல் வேலட் மார்க்கோ போலோ லோஞ்ச் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
போட்டிகளை நடாத்தும் குழுவின் தலைவர் சமீம் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஹமீத் அல் ஹூஸைனியா கல்லூரியின் அதிபர் திருமதி சியானா டெயின் மற்றும் போட்டிகளுக்கான அனுசரைணயாளர்கள் உட்டபட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பங்குபற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு ரி சேர்ட் மற்றும் வெற்றிக் கேடயங்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வினை அதிபர் உட்பட 2014 பெச் மாணர்களும் இணைந்து அறிமுகம் செய்து வைத்ததுடன் அனுசரைணயாளர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







ஏ.எஸ்.எம்.ஜாவித்
