உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், பொலன்னறுவ, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல் மாகாணம், காலி மாவட்டம் மற்றும் கடலோரப் பகுதிகளில் காலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.

இதற்கிடையில், மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *