பெசிலுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்
2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த நிதி பயன்பாடு தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
