ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பின் முஸ்லிம் பெண்கள் மாநாடு எதிர் வரும் சனிக்கிழமை
ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பு நடாத்தும் முஸ்லிம் பெண்கள் மாநாடு எதிர் வரும் சனிக்கிழமை (17)சாய்ந்தமருது கலாச்சார நிலையத்தில் நடைபெறவுள்ளது.
அமைப்பின் தலைவி மஷூரா தலைமையில் “ஆரோக்கியமான குடும்பம் ஆற்றுள்ள பெண்ணின் ஆதாரம்” என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவலகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார், உயர்நீதிமன்ற ஓய்வு நிலை நீதிபதி ஏ.எல்.என்.மைமூனா, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகவும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், சிரேஷ்ட நூலகர் மஸ்ரூபா முகம்மட் மஜீத் கௌரவ அதிதிளாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.நிகழ்வில் கவிதை தொகுப்பு, சிறு கதை தொகுப்பு மற்றும் கௌரவிப்புக்கள் என்பன இடம்பெறவுள்ளது.
(ரிபாஸ்)
