ஹாஷிம் உமர் பெளண்டேஷன் ஏற்பாட்டில் 26 ஆம் கட்ட மடிக்கணிணிகள் வழங்கும் நிகழ்வு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பு
ஹாஷிம் உமர் அறக்கட்டளையின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தின் 26ஆவது கட்ட நிகழ்வு, நேற்றுமுன்தினம் (2026.10.10) கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹாஷிம் உமர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் முன்னாள் செயலாளர் former Additional Secretary to the Ministry of Law and order, A L M சலீம்,
‘தமிழன்’ பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம். ஜவ்பர், சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தமிழ் செய்திப் பிரிவின் முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் முன்னாள் தயாரிப்பாளர் எம்.எச்.எப். ரின்ஸா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அறக்கட்டளையின் பணிப்பாளர் மரியம் ஹாஷிம் உமர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஊடகக் கண்காணிப்பு அதிகாரி ஜிப்ரியா இப்ராஹிம், Vasntham tv, ஊடகவியலாளர் அஸ்கர், வர்த்தகர் எம். வாஜித், Author of English Lesson book, English Teacher சிஹாரா ஹலால்தீன், உள்ளிட்ட பலரும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
ஹாஷிம் உமர் அறக்கட்டளையின் நிறுவுநர் ஹாஷிம் உமர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏ. குமாரி – கேகாலை, எம்.ஏ.ஏ. நுஹா – ஜே.எப். ரிஷாதா – கலேவெல, எம்.ஐ.எப். ஹாஜிப் – சாய்ந்தமருது
எஸ்.எப். ஹஸ்னா –
ஆகிய மாணவர்களுக்கு ஹாஷிம் உமர் மற்றும் விசேட அதிதிகளால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மேலும், ஹாஷிம் உமர் அறக்கட்டளையின் ஆதரவற்ற ஊடகவியலாளர்களுக்கு உதவும் திட்டத்தின் கீழ், சிரேஷ்ட கலைஞர் ஜுனைதீனுக்காக அவரது மனைவி சக்கியா ஜுனைதீன் அவர்களுக்கும், சக்தி ஊடகவியலாளர் ஆர். செல்வராஜா (ஆரை யம்பதி )அவர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அபாகஸ் (Abacus) கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்குப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட விசேட அதிதிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









(அஷ்ரப். ஏ. சமத் )
