உள்நாடு

ஜமாதுல் ஊலா மாதம் இன்று இரவு ஆரம்பம்

ஹிஜ்ரி 1448 ஜுமாதுல் ஊலா இஸ்லாமிய மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நேற்று ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பள்ளி வாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நாட்டின் எப்பாகத்திலும் பிறை தென்பட்டதற்கான ஊர்ஜீதம் செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்காத காரணத்தினால் ஜுமாதுல் ஆகிர் மாதத்தை 12ஆம் திகதி 30 ஆக பூர்த்தி செய்து இன்று மாலை ஜுமாதுல் ஊலா ஆரம்பமாவதாக பிறைக் குழு உறுப்பினரும், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் மெளலவி றிழா (ஹஸனி)
இலங்கை வாழ் மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

மேற்படி பிறை பார்க்கும் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள் , அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதி மெளலவி முக்சித் அஹமட் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களபிரதிநிதிகள், வளிமண்டல திணைக்கள அதிகாரி மொஹமட் சாலிஹீன், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள் மற்றும் மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *