உள்நாடு

Innovatus Campus பட்டமளிப்பு விழாவில் அருட்தந்தை டாக்டர் எஸ். சந்திரு பெர்னாண்டோ பங்கேற்பு

Innovatus Campus நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் (BMICH) Lotus Hall இல் சிறப்பாக நடைபெற்றது.

Innovatus Campus நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் கிருஷ்ணா மயில்வாகனத்தின் அன்பான அழைப்பின் பேரில், அருட்தந்தை டாக்டர் எஸ். சந்திரு பெர்னாண்டோ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக டாக்டர் ரோஹன் பல்லேவத்த பங்கேற்றார். இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் (Ihab I.M. Khalil) மற்றும் இலங்கைக்கான நேபாளத் தூதுவர் விஜய் குமார் ரௌத் (Vijay Kumar Raut) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இம்ரான் காமில், டாக்டர் கல்ஹாரி பிட்டிகல உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது, தமது கல்விப் பயணத்தில் முக்கிய மைல்கல்லை எட்டிய பட்டதாரிகளுக்கு அருட்தந்தை டாக்டர் எஸ். சந்திரு பெர்னாண்டோ தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பட்டதாரிகள் தமது அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதுடன், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என அவர் வாழ்த்தினார்.

கல்வியானது தனிமனிதர்களை வலிமைப்படுத்துவதுடன், அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமைகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சிறப்புமிக்க பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கத் தமக்கு அழைப்பு விடுத்த டாக்டர் கிருஷ்ணா மயில்வாகனம் மற்றும் நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த Innovatus Campus நிறுவனத்தின் முழுக் குழுவினருக்கும் அருட்தந்தை டாக்டர் எஸ். சந்திரு பெர்னாண்டோ தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அருட்தந்தை டாக்டர் எஸ். சந்திரு பெர்னாண்டோ அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *