உள்நாடு

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் இலங்கை வீரர் தங்கப் பதக்கம் வென்று சாதனை

இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள நேரு விளையாட்டரங்கில் அக்டோபர் 09 அன்று நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த பிரதீப் குமார ஜயகொடி 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கையின் நக்காவத்த, பிஹல்பொல பகுதியைச் சேர்ந்த இவர், இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் தனது திறமையை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது இந்தச் சாதனை இலங்கையின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதுடன், ஏனைய விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிக்கும் சாதனையாக அமைந்துள்ளது.

சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கையின் பெயரை உயர்த்திய பிரதீப் குமார ஜயகொடி அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *